பாகப் பிரிவினைச் சட்டம் (The Partition Act, 1893)
பாகப் பிரிவினைச் சட்டம் (The Partition Act, 1893) Read More »
(2008 மார்ச் 31 வரை திருத்தம்)
இந்திய அரசமைப்பு(Constitution of india) Read More »
மதுரை காவலன் செயலியில் Track Alagar என்ற முறையை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
சித்திரை திருவிழாவின்போது மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ”இந்த Track Alagar வசதியின் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அருள்மிகு கள்ளழகர் எதிர் வரும் 14.4.2022 தேதி அன்று அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை, கள்ளழகர் எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தங்கள் செல்போனில் மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற இணைப்பு மூலம் வரும் வரைபடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதனால் மக்கள் நேரம் விரயமாவதை தடுக்க முடியும் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்க முடியும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை தவிர்த்து கள்ளழகரை தரிசிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆண்ட்ரியாட் செல்போனில் உள்ள Play Store ல் இலவசமாக மதுரை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே செயலியில் பதிவிறக்கம் செய்தவர்கள் அதனை அப்டேட் செய்த பின்னால் மதுரை காவல் செயலியில் உள்ள Track Alagar (கள்ளழகர் வருகை) என்ற இணைப்பு மூலம் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த மதுரை காவலன் செயலியை இதுவரை 44,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இந்த செயலி மூலம் புகார்கள் 600, மற்றும் இந்த செயலியில் locked home வரும் வசதி மூலம் இதுவரை 1100 தகவல்கள் பெறப்பட்டு உரிய ரோந்து ஏற்பாடு செய்து கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது 2G செல்போனிலும் குறுஞ்செய்தியாக கள்ளழகர் வருகையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
சித்திரை திருவிழா கள்ளழகர் வருகையினை முன்னிட்டு அழகர் கோவிலிருந்து மதுரை மாநகர் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்கு சுமார் 1000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காவலன் செயலியில் Track Alagar அறிமுகம் – அசத்தும் காவல்துறை Read More »
சட்டம் பற்றி தமிழ் & ஆங்கிலம்:- Read More »