BNS - 154 பாரதிய நியாய சன்ஹிதா (BHARATIYA NYAYA SANTHITA)
BNS 154(IPC 126) இந்திய அரசுடன் இணக்கமாக உள்ள அல்லது அமைதி உறவு கொண்டுள்ள அயல்நாட்டு அரசு ஏதொன்றின் மண்டலங்களில் சூறையாடும் அல்லது சூறையாட முன்னேற்பாடுகள் செய்யும் எவரொருவரும் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுதல் வேண்டும்.
அவ்வாறு சூறையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த உட்கருத்துக் கொள்ளப்பட்ட அல்லது அத்தகைய சூறையால் கைப்பற்றப்பட்ட சொத்து எதுவும் தண்டனை இழப்புக்கு உள்ளாதல் வேண்டும்.