BNS Section 115(2)
தன்னிச்சையாக காயம் விளைவித்தல். 

   பிரிவு 122, உட்பிரிவு (1) ல் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, தன்னிச்சையாக காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும் ஓராண்டு வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.