BNS பிரிவு 121(2)
பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க தன்னிச்சையாக காயம் அல்லது கொடுங்காயம் விளைவித்தல்.
ஒரு பொது ஊழியராக இருப்பவர் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தம் கடமையை செய்கையில், அல்லது அவர் வேறு பொது ஊழியர் எவரும் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தம்முடைய கடமையைச் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் அல்லது தடை படுத்த வேண்டும் என்ற உட்கருத்தோடு அல்லது பொது ஊழியர் என்ற முறையில் தம்முடைய கடமையை சட்டப்படி செய்கையில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்ய முயலப்பட்ட ஏதோ ஒன்றின் விளைவாக எவருக்கேனும் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், ஒரு ஆண்டிற்கு குறையாத, பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விஜித்து தண்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.