பிரிவு 124(1)
அமிலம் முதலாம் அவற்றைப் பயன்படுத்துதல் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.
காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அத்தகைய காயம் அநேகமாக விளைவிக்க கூடும் என்று அறிந்து, அமிலம் வீசுவதன் மூலம் அல்லது அந்த நபருக்கு அமிலம் உட்செலுத்துவதன் மூலம் அல்லது எதன் மூலமேனும் நபர் ஒருவரின் உடலின் ஏதேனும் பகுதி அல்லது பகுதிகளை நிரந்தரமாக அல்லது பகுதியாக சேதம் அல்லது உருக்குலைவு அல்லது எரித்தல் அல்லது முடமாக்குதல் அல்லது விகாரமாக்குதல் அல்லது ஊனமாக்குதல் செய்கிற எவரொருவரும் இருவகை சிறை தண்டனைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆனால் ஆயுட்காலம் வரை நீட்டிக்கலாம் சிறந்த தண்டனை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக அத்தகைய பண தண்டம் பாதிப்புற்றவரின் மருத்துவ செலவுகளுக்கு ஈடுகட்டும் வகையில் நியாயமாக நிறுத்த வேண்டும்.
மேலும் வரும்புரையாக இந்த பிரிவின் கீழ் விதிக்கப்படும் ஏதேனும் அபராதம் பாதிப்புற்றவருக்கு கொடுக்கப்படுதல் வேண்டும்.
விளக்கம் 1 – இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக”அமிலம்” என்பதில் அமிலத்தன்மை உள்ள அல்லது அரிப்பு தன்மை அல்லது எரிக்கும் தன்மை உள்ள, அதாவது வடுக்கள் அல்லது விகாரம் அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்படுத்தி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் பொருள் உள்ளடங்கும்.
விளக்கம் 2 – “நிரந்தர அல்லது பகுதி சேதம்” என்பதில் நபர் ஒருவரின் உடலின் ஏதேனும் பகுதி அல்லது பகுதிகளின் உருக்குலைவு அல்லது முடமாக்குதல் அல்லது எரித்தல் அல்லது விகாரம் ஆக்குதல் அல்லது ஊனமாக்குதல் உள்ளடங்கும்.