Part-1 TO Part-5

பாகம்- 1 (Part-1) நிலைய குற்ற வரலாறு
காவல் நிலைய ஆணை 742-743- படிவம் என்.107

        இப்பதிவேட்டில் சொத்து சம்பந்தமான குற்றங்களில் உண்மையான வழக்குகள் உண்மை சம்பவப் பதிவேடு மற்றும் அதனை செய்ய முயற்சித்த வழக்குகள் ஆகியவற்றை பற்றிய விபரங்கள் காலக்கிரமப்படி (chronological order) பதிவு செய்யப்படும். இது 6 கட்டங்களை உடையது. இது காவல் நிலையத்தின் நிரந்தரப்பதிவேடு ஆகும்.

  1. இப்பதிவேட்டில் குற்ற எண், சட்டப்பிரிவு, குற்றம் நடந்த நாள், நேரம், இடம், வாதியின் பெயர், முகவரி, களவு போன | கைப்பற்றப்பட்ட சொத்தின் விவரம் மற்றும் மதிப்பு, குற்ற செய்முறை, குற்றம் பற்றிய தகவல்கள் எதிரியை கைது செய்த விவரம் மற்றும் வழக்கின் முடிவு ஆகிய விபரங்கள் பதில் செய்யப்பட வேண்டும் வழக்கில் எதிரி கையாண்டுள்ள குற்ற செய்முறைகளை ஆறாவது கட்டத்தில் விபரமாக குறிப்பிட வேண்டும்.
  2. தொடர்புடைய பதிவுகளை தொடர்புடைய பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் (Cross reference) எதிரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த தேதி மற்றும் கைவிரல் கிரேகை பதிவுக் கூட வரிசை எண் (FB Serial Number) குறிப்பிட வேண்டும்.
  3. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் அடியில் குறிப்பிட்டு காட்ட வேண்டும்.
  4. ஆண்டு முடிவில் ஆண்டுக்கான குற்றத்தொகுப்பு தயார் செய்ய வேண்டும். அதில் வரும் ஆண்டிற்கான குற்றத் தடுப்பு திட்டங்கள் குறித்து விபரமாக குறிப்பிட வேண்டும்.

பாகம் – 2 (Part-2) குற்ற வரைபடம்
காவல் நிலைய ஆணை 744

         இது நிலைய சரகத்தில் நடந்த குற்றங்களையும், எல்லைக் காவல் நிலைய சரகத்தில் நடந்த குற்ற சம்பவ இடங்களை காட்டும் வரைபடம் ஆகும்.

  • இதில் நிலைய சரகத்திலுள்ள கிராமங்கள், அதன் எல்லைகள், புவியியல் ரீதியான அமைப்புகள், எல்லைக்காவல் நிலையங்கள் ஆகியவை குறிப்பிட வேண்டும்.
  • குற்ற நிகழ்வுகளை குற்ற செய்முறை வாரியாக தனித்தனி வண்ணத்தில் குறிப்பிட்டு குற்ற நிகழ்வு தேதியை உரிய இடத்தில் குறிப்பிட வேண்டும். example II(e)/12-05. III(j)/12-7.
  • நிலைய சரகத்தின் எந்த பகுதியில் குற்றங்கள் பெருமளவில் நடைபெறுகிறது என்பதனை காட்டும் வகையில் இருத்தல் வேண்டும்.
  • நிலைய சரகத்தின் உள்ள கிராமங்கள், நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், சந்தை கூடும் இடங்கள், பௌர்ணமி, அமாவாசை தினங்கள் பற்றிய குறிப்புகள் வரைய வேண்டும்.
  • ரோந்து வாரியாக கிராமங்களை பிரித்து தனித்தனி வண்ணத்தில் வரைய வேண்டும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட குற்றங்கள், விபத்து குற்றங்கள், மதுவிலக்கு குற்றங்கள் ஆகியவைகளுக்கு தனித்தனியாக வரைபடங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.